சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ் எஸ்.ஆர்.22டி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அது புறப்பட்ட 10 நிமிடங்களில் திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விமான விபத்தில், இங்கிலாந்து நாட்டினர் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். விபத்தின்போது விமானம் தீப்பிடித்து எரிந்ததுடன், புகையும் வெளியேறி உள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதனை அடுத்து, மீட்பு அமைப்பினர், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது.
சுவிட்சர்லாந்தில் விமான விபத்தில் 3 பேர் பலியாகினர்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>