ஜிம்பாப்வே ஏரியில் படகு கவிழ்ந்து விபத்தில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது

Share

ஜிம்பாப்வே ஏரியில் படகு கவிழ்ந்து விபத்தில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி ஜிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்த ஏரி 200 கி.மீ-க்கும் அதிகமான நீளமும், சில இடங்களில் 40 கி.மீ. வரை அகலமும் கொண்டதாக உள்ளது.

ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்த ஏரியைப் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ எல்லை ஏரியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.

கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் 27 பேர் மாயமாகினர் எனவும், ஏரியில் இருந்து 77 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்தது. விசாரணையில் அந்தப் படகில் 150 பேர் பயணித்தனர் என கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என ஜிம்பாப்வே காவல்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், கரிபா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இதில் 18 சிறுவர்களும் அடங்குவர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>