ஹங்கேரியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்

Share

ஹங்கேரியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பிய நாடான செர்பியாவில் இருந்து போலாந்துக்கு சுற்றுலாபேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 59 பேர் பயணித்தனர். இந்நிலையில், பேருந்து ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் அருகே மிசொகிரடெஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறை, விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>