நடிகர் ஜீவா நடித்துள்ள தகப்பன் படத்தின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கோ, கலகலப்பு 2 , ரவுத்திரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அவர் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் ஜீவா தற்போது ’தகப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ரா.வெங்கட் இயக்கத்தில், லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், ஜீவா நடிப்பில் உருவாகி வரும் தகப்பன் படத்தின் முதல்காட்சி பதாகை வெளியாகியுள்ளது. தகப்பன் படம் டிசம்பர் மாதம் வெளியீடு ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>