ஜெர்மனி மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி பெற்றுள்ளது

Share

ஜெர்மனி மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி அரசியலில் இதுவரை இல் லாத ஒரு மாபெரும் அரசியல் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாக்சனி-அன்ஹால்ட் மாகாணத்திற்கு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில், அதிபர் பிரீட்ரிக் மெர்சின் ஆளுங்கட்சிக்கு மக்கள் பலத்த அடியைக் கொடுத்துள்ளனர்.

கடந்த 24 ஆண்டுகளாக இம்மாகாணத்தை ஆண்டு வந்த ஆளுங்கட்சி வெறும் 17.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. மாறாக, கடுமையான குடியேற்ற எதிர்ப்பு மற்றும் தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்ட ‘ஏ.எப்.டி’ கட்சி 43.8 சதவீத வாக்குகளை அள்ளிக் குவித்து வெற்றியைப் பெற்றுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>