பொலிவியா: ராணுவ தளத்தில் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

Share

பொலிவியாவில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பொலிவியா. இந்நாட்டின் இங்கவி மாகாணம் வியாச்சா நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, இந்த ராணுவ தளத்தில் பீரங்கி படைப்பிரிவில் கடந்த 4ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், ராணுவ தளத்தில் ஏற்பட்ட உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. வெடி விபத்தில் 84 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, இந்த வெடிவிபத்தில் 7 பேர் மாயமாகியுள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>