பல தரப்புக்களிலிருந்து எழுந்துள்ள கண்டனங்கள்!
தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, ஊழல்வாதியும் ஏமாற்றுப் பேர்வழியுமான செந்தில் தொண்டமானை பாராளுமன்ற உறுப்பினர், ஶ்ரீதரன் சந்தித்தது ஏற்புடையது அல்ல என பல தரப்புக்களிலிருந்து எழுந்துள்ள கண்டனங்களால் தமிழரசுக் கட்சி வட்டாரங்களில் விமர்சனங்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் 20ம் திகதி அன்று வியாழக்கிழமை மேற்படி சந்திப்பு இடம்பெற்றதாக அறியப்படுகின்றது. இது குறித்து இன்னும் சூடான கருத்து மோதல்கள் இடம்பெறலாம் எனவும் அறியப்படுகின்றது.
இந்த சந்திப்புக்கு பின்னால் இருவருக்கும் சுய விருப்பங்கள் இருந்திருக்கலாம் என்றும் ஆனால் இதன் மூலம் தமிழர் அரசியலில் மேலும் பிரிவுகளும் சச்சரவுகளும் அதிகரிக்கலாம் எனவும் கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றுள்ளன.
ஊழல் பேர்வழியான செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுனராக ரணில் விக்கிரமசிங்க என்னும் ஊழல் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்ட பின்னர் அந்த பதவிக்காலத்தில் பல நிதி மோசடிகளும் கிழக்கில் இடம்பெற்றுள்ளன என்னும் காணிகள் பல பிற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள்மை இங்கு குறிப்பிடத்தக்கது என்றும் கிழக்கிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.!
எனவே விரைவில் நீதி மன்ற விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ள ஒருவரை தந்தை செல்வாவின் நினைவு வைபவங்களில் இணைத்துக் கொள்வது எந்தவகையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க்து.