கனடா வாழ் ‘நிவாரணம்’ புகழ் செந்தில்குமரன் அவர்களது மனித நேயப் பணிகள் கடந்த பல வருடங்களாக இலங்கையைச் சென்றடைந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு பலன்கள் பல கிட்டியுள்ளன.
அந்த வரிசையில் கடந்த வாரம் இலங்கையின் வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 6 இரத்த சுத்திகரிப்பு கருவிகளை வழங்கிய கனடா ‘நிவாரணம்’ அமைப்பு புகழ் செந்தில்குமரன் அந்த வைபவத்திற்கு அழைக்கப்பெற்றிருந்த இலங்கைக்கான கனடியத் தூதுவர் மற்றும் வடக்கு மாகாண ஆளுனர் ஆகியோர் முன்னிலையில் 83 ஆயிரத்து 500 டாலர்கள் பெறுமதியான மேற்படி கருவிகளை உரியவர்களிடம் வழங்கினார். அங்கு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுனர் வேதநாயகன் அவர்கள் இந்த அன்பளிப்பு எத்தனையோ நோயாளிகளின் வாழ்க்கைக்கு உதவப் போகின்றது என்றும் இது ஒரு’உயர்ந்த மனித நேயப்பணி’ என்றும் புகழாரம் சூட்டினார்.
இந்த கையளிப்பு வைபவம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் நடைபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.