தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்காக 3 முக்கிய குழுக்ககை அமைக்க மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்தார்

Share

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்காக 3 முக்கிய குழுக்களை அமைக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்காக அரசியல் விவகாரக் குழு, ஆலோசனைக் குழு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆகிய 3 குழுக்களை உடனடியாக அமைக்க மல்லிகார்ஜுன் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் விவகாரக் குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். 7 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் கே.ஆர்.ராமசாமி தலைமையிலும், ஜெயக்குமார் , ராமசுப்பு, யு.பலராமன், ஆர்.என்.பழனிசாமி, சுதா ராமகிருஷ்ணன், அமீர்கான் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்த குழுக்கள் மாநிலத்தில் அரசியல் செயல்பாடுகள், உள் நிர்வாகம் மற்றும் கொள்கை தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>