எஸ்.ஐ.ஆர். பணியில் படிவம் 6ஐ மாற்றியுள்ளார் ஞானேஷ்குமாரென” மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். எஸ்ஐஆர் உட்பட தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துக்கு அவர் செவி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பல்வேறு மாணவர், இளைஞர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர். பணியில் படிவம் 6ஐ சட்டவிரோதமாக, ஒருதலைபட்சமாக ஞானேஷ்குமார் மாற்றியுள்ளார். படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகி உள்ளது. பாஜகவுக்கு உதவ தனது பதவியை முறைகேடாக ஞானேஷ்குமார் பயன்படுத்தியதற்கு இது சான்று. ஞானேஷ்குமாரும், நமது ஜனநாயகம் மீது தாக்குதலில் ஈடுபட்ட பிறரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். என அதில் பதிவிட்டுள்ளார்.
படிவம் 6ஐ மாற்றியுள்ளார் ஞானேஷ்குமாரென ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>