தமிழ் சினிமாவுக்கு தனி ஓ.டி.டி. தளம் அமைக்கப்படுமென அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6 ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தயாரிப்பு செலவு, ஓடிடி வெளியீட்டு கால அவகாசம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. வெற்றி பெற்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார். இந்த விழாவில் அவர் பேசுகையில், விருது வழங்கிய பிறகு மேடையில் பேசிய அவர், “நானும் சினிமா குடும்பத்தில் ஒருவன் தான். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிக்கும் போது நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன். இப்போது நான் அமைச்சர் ஆகி விட்டேனா என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. இதற்கெல்லாம் காரணமாக இருந்த முதல்வருக்கு நன்றி. சினிமா துறை மேல் அரசுக்குத் தனிக் கவனம் உள்ளது. உங்கள் துறையில் இருந்து வந்தவர்தான் முதலமைச்சராக உள்ளார். இனி ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சார்பில் சினிமா விருதுகள் வழங்கப்படும். தமிழ் சினிமாக்கவுக்கான அரசு ஓடிடி தளம் அமைப்பது குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி வரும். சிறு பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, வரிவிலக்கு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியைப் பெற தலைமைச் செயலகத்தில் வந்து நிற்கும் நிலை இருக்கக்கூடாது என்பதற்காக அனுமதி நடைமுறைகள் நவீனமயமாக்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடர்பான விவரங்களை முறையாக அளித்து அனுமதி கோரினால் தானியங்கி முறையில் அனுமதி கிடைக்கும். முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு, அனைத்து துறைகளிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது ” என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமாவுக்கு தனி ஓ.டி.டி. தளம் அமைக்கப்படுமென அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>