“அட்டக்கத்தி” தினேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பந்தா கேங்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தினேஷ். இவர், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, குக்கூ, விசாரணை உள்ளிட்ட முக்கியத் திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து, இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘வேட்டுவம்’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக இருக்கிறது. நடிகர் தினேஷ் தனது 26ஆவது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ‘பந்தா கேங்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. மதி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பாக வேலாயுதம் என்பவர் தயாரித்துள்ளார். தினேஷ் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு தலைப்பு மற்றும் முதல்காட்சி பதாகையை வெளியிட்டுள்ளது. ‘ஓஜி ரூட்டு தல’ என்ற அடைமொழியுடன் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கயல் ஆனந்தி, லிங்கேஷ், சுபா வரதராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முழு நீள நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெறும் தருவாயில் உள்ளது.
“அட்டக்கத்தி” தினேஷ் நடிக்கும் புதிய படம் ‘பந்தா கேங்ஸ்’
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>