தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க உள்ளன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்படுவதில்தான் விருப்பம் எனத் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விசிக, இடதுசாரிகள் தனித்தனியாக அவர்களது கட்சி செயற்குழுக் கூட்டங்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஆலோசனை செய்து வருகிறார். இத்தகைய பரபரப்பான சூழலில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருப்பதாவது:“திமுக – அதிமுக கூட்டணி என்ற திட்டம் தற்போது வரை இல்லை. ஆட்சி அமைக்க திமுக முயற்சிக்குமா என்று கேட்கிறீர்கள். ஆளுனர் 10-ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளார். விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், நாங்கள் பரிசீலனை செய்வோம். எங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்வோம்” என்றார்.
திமுக ஆட்சி அமைக்க முயற்சி? – டிகேஎஸ் இளங்கோவன் பதில்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>