(யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சங்கரத்தை)
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சங்கரத்தையை பிறப்பிடமாகவும், கனடா – பிரம்ரன் மாநகரில் வாழ்ந்துவந்தவருமான திருமதி நிர்மலா (நிம்மி) மகாலிங்கம் அவர்கள் கனடா – பிரம்ரன் நகரில் கடந்த 02-05-2026 அன்று சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கெங்காதரன் கனகம்மா தம்பதியின் ஆசைப் புதல்வியும். காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி – சிவக்கொழுந்து தம்பதியின் அன்பு மருமகளும்,
மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜன், சுகன்ஜன், பிரியங்கா ஆகியோரின் பிரியமுள்ள தாயாரும், நிதர்சன் மற்றும் தாரணி ஆகியோரின் மாமியும்,
சிறிதரன், ராதிகா, மற்றும் சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மோகன், முருகா, இராஜரட்ணம், சண்முகநாதன், பேரின்பநாயகம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கிருபாகரன் மற்றும் விஜேந்திரன் மற்றும் தேவமனோகரி, இராஜலட்சுமி. சரஸ்வதி, வசந்தலோகினி மற்றும் நிர்மலாதேவி, மீரா மற்றும் காலஞ்சென்ற செல்வி (வதனா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவீனா அவர்களின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை 30 Bramwin Court Suite D+E, Brampton, ON. L6T 5G2 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Brampton Crematorium & Visitation Centre மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பெற்று பின்னர் மறுநாள் 11-05-2026 திங்கட்கிழமையன்று காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 11.00 மணி வரை கிரியைகள் நடைபெற்று பின்னர் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
மகாலிங்கம் – கணவர்: (613) 662-3589
சிந்துஜன் – மகன்: (647) 861-4226
சுகன்ஜன் – மகன் : (416) 458-6020
பிரியங்கா -மகள்:(647) 865-3975
நிதர்சன் – மருமகன்: (647) 949-7963