திருக்குறளில் ‘புகழ்’ பற்றிய சிந்தனைகள்

Share

இவ்வுலகில் புகழ் பெறும் உரிமை அனைவர்க்கும் உண்டு என்பது இவ்வாய்வின் முடிவாகும்.
அதிலும் ஈகை செய்து புகழ் பெற்று வாழ்தல் முக்கிய முடிவாகவும் பெறப்பட்டுள்ளது.

உலகெலாம் போற்றும் தமிழ் வேதமாம் திருக்குறளின் தத்துவக் கருத்துக்களில், புகழ் பற்றிய சிந்தனைகள் கொண்ட ஒரு கட்டுரை இது. நாம் எதை விரும்புகிறோமோ அதை மட்டும் தேடுவது பெரிதல்ல. நமக்கும், பிறருக்கும் தெரியாததையும் தேடி, அதை உலகோருக்கும் தருவது, நம் கடமையாகும். .

புகழ் என்றால் என்ன?

புகழ் என்பது ஒரு நபரின் மதிப்பு, ஒரு இடம், ஒரு பொருள், ஒரு யோசனை அல்லது ஒரு தெய்வீக ஜீவனின் மதிப்பு அல்லது நல்லொழுக்கத்தை உயர்த்தும் அடிப்படையில் உறுதிப்படுத்தும். புகழ் என்பது நல்லதைக் கொண்டாடுவது, ஒரு சாதனையை மகிமைப்படுத்துவது, எதையாவது மதிப்பையும் முக்கியத்துவத்தையும் அங்கீகரிப்பது, ஒருவரின் நற்பண்புகளை புகழ்வது. ஒரு சொல்லாட்சிக் கலை புகழ்ச்சியை ஒருவரின் அல்லது ஏதோவொன்றின் நற்பண்புகளை அல்லது குணங்களை புகழ்வதில் கவனம் செலுத்தும் ஒரு வினோதமான வகையாக அங்கீகரிக்கிறது.

ஒரு பாராட்டு, யாராவது அல்லது ஏதாவது செய்யப்படுகிறது என்று ஒரு பாராட்டு அல்லது மன்னிப்பு உள்ளது சிறப்பித்த தங்கள் பண்புகள், நடத்தைகள், நன்மைகளுக்காக, உடல் அல்லது அறிவுசார் குணங்கள், முதலியன புகழ் அதைப் பெறும் நபரின் ஆன்மாவின் மீது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இது ஆளுமை மற்றும் தன்மைக்கு உண்மையிலேயே சாதகமான செல்வாக்கை உருவாக்குகிறது

பெரும்பாலான உளவியல் வல்லுநர்கள் பாராட்டுக்களை வழங்குவதும் பெறுவதும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்று கருதுகின்றனர், ஏனெனில் இது சுயமரியாதையை மேம்படுத்த உதவுகிறது. பெற்றோர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் குழந்தைகள் நல்ல தரங்களைப் பெறுகிறார்கள் அல்லது வேறு எந்த செயலிலும் சிறந்து விளங்குகிறார்கள், அவர்களின் வேலையையும் முயற்சியையும் பாராட்டும் பணியை மேற்கொண்டால், இந்த குழந்தைகள் அதிக நம்பிக்கையையும் உந்துதலையும் உணருவார்கள் தொடர்ந்து தங்கள் செயல்பாடுகளை திறம்பட பயன்படுத்த உதவும்.

நூல் அறிமுகம்

திருக்குறள். தமிழ் கூறும் நல்லுலகத்து பொன் போலப் போற்றும் பனுவல் ஒன்றுண்டு. பழைய உரைகள் பத்தின் மிகுதியோ பகுதியோ நமக்கெட்டியுள்ளன. இவற்றை இயற்றினோர், தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிமேலழகர் பருதி -திருமலையர் மல்லர் பரிப் பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற் கெல்லை யுரை கண்டாரிவர். இவற்றைத் தருமபுர ஆதினம் அச்சிட்டு அளித்திருப்பது நூலின் கல்விக்குப் பேருதவியாகும்.

தமிழ்மொழியின் ஒரு தொன்மைமிக்க அற இலக்கிய நூல் திருக்குறள். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். திருக்குறள், முப்பால், உலகப் பொதுமறை, உத்தரவேதம், தெய்வநூல், தமிழ்மறை, திருவள்ளுவப் பயன், தமிழ்மனுநூல் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. நாற்சீரும், முச்சீரும் கொண்ட ஈரடி வெண்பாவால் ஆக்கப் பெற்றது குறள். அறிவுச் செல்வம் நிறைந்ததால், இதற்குத் திரு என்ற அடைமொழி கிடைத்தது. 10 குறள் வெண்பாக்கள் கொண்ட 133 அதிகாரங்கள் கொண்டன.

சங்க இலக்கிய வகைப்பாட்டில், பதினெங்கீழ்க் கணக்கு எனப்படும் நூல்களின் திரட்டில் இருக்கும் நூல், குறள் வெண்பா எனும் பாவகையால், 1330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டவை. அறம், பொருள், காமம் ஆகிய மூன்று பகுப்புக்களைக் கொணட நூல். இது வாழ்வியல் நூலாகும். இந்தூல், பொதுத்தன்மை, மதச்சார்பின்மை எனும் பண்புகள் கொண்டது. அகிம்சையை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல். தனிநபர் நல்லொழுக்கங்களாக, இன்னா செய்யாமை, புலால் உண்ணாமை, வாய்மை, கருணை அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், கள்ளாமை, மது அருந்தாமை, ஆட்சியாளர் ஒழுக்கம், சமூகநீதி, அரண், போர், கொடியோர்க்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பல அரசியல், மற்றும் நட்பு, காதல், இல்லறம் எனும் சமூக தலைப்புக்களை உள்ளடக்கியது.

வள்ளுவர் காலம்

இந்நூல், கி.பி. 1ஆம் நூற்றாண்டில் உருவானது எனக் கொள்ளலாம் (வித்தியானட்ந்தன் -தமிழர் சால்பு) பல அறிஞர்களாலும் தலைவர்களாலும் பரவலாகப் போற்றப்பட்டு வந்துள்ளது திருக்குறள். இவர்களில் இளங்கோவடிகள், கம்பர், லியோ டால்ஸ்டாய், மகாத்மா காந்தி, ஆல்பர்ட் சுவைட்சர், இராமலிங்க அடிகள், வ. உ. சிதம்பரம்பிள்ளை, காரல் கிரவுல், ஜி. யு. போப், அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி மற்றும் யூ ஹ்சி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

தரவுகள்.

திருவள்ளுவர் வரையறுத்த புகழ் பெறும் உரிமைகள் என்னும் இச் சிந்தனைகள், 12 குறள்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

“புகழ் கள்ளைவிடக் கொடியதாகும். கள்ளைக் குடித்தால்தான் போதை வரும். ஒருவனைப் புகழ்ந்தவுடனேயே அவன் தலைசுற்ற ஆரம்பித்துவிடும். புகழ் கொடிய சத்துருவாகும்.” எனக் கூறுகிறார் சிறி சதானந்தர்.

புகழ் என்பதற்கான அர்த்தம், செல்வம், வெளிச்சம் போன்றனவாகும். இந்தப் புகழ் மனித வாழ்வுக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பதை நாம் அறியலாம். புகழை விரும்பாத மனிதர் இல்லை எனவே கூறலாம். இனி புகழ் பற்றிய சில திருக்குறள்களை ஆராய்வோம்.

1. அறம் செய்து புகழ் பெறுவது

அறத்தான் வருவதே இன்பம் (குறள் 39)

அறம் செய்து வாழும் மனிதன், மனதில் மனித நேயம் மிக்கவனாக இருப்பதனால், அவன் உண்மையாக அறத்தின் வழி வாழ முற்படுகின்றான். எனவே புகழ் பெறும் உரிமை வாழ்வை வாழ்கின்றான். புகழ் இல்லா வாழ்க்கை வாழ்பவனால், நிச்சயம் அறம் செய்ய முடியாது என்பதை விளக்குகிறார் திருவள்ளுவர்.

2. புகழ் பெறுதலால் வரும் பீடு நடை

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை (குறள் 59)

புகழுடன் வாழும் குடும்பம் கொண்ட ஒருவனுக்கு பெருமை சேர்க்காத மனைவி கிடைக்காத குடும்பத்தில் அவனை இகழ்வார் முன், அந்தக் கணவனால், காளைபோல் பெருமிதமாக நடக்கும் துணிவு இல்லாமல் போய் விடும் எனக் காட்டுகின்றார் திருவள்ளுவர்.

3. ஈகையால் புகழ் பெறுவது

உரைப்பவர் உரைப்பவை எல்லாம் (குறள் 232)

இரப்பவர்க்கும் வறுமையில் வாழ்பவர்க்கும் இல்லை என்று சொல்லாது, முடிந்தவரை தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வாழ்வது, உயர்ந்தவர்களால், போற்றப்படும் உரிமையைப் பெறவும் புகழ்பெறவும் உதவும். கடையேழு வள்ளல்களும் ஈகையிற் சிறந்து விளங்கிப் புகழ் பெற்றவர்களே. அது போலவே புறாவுக்காகத் தன் சதையையே கொடை தந்து புகழ் பெற்றான் மன்னன் சிபிச் சக்கரவர்த்தி.

4 இனநலத்தால் புகழ் பெறுவது

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் (குறள் 457)

ஒருவனின் மனநலம் நன்றாக இருக்கும் போது, அவனைச் சார்ந்த மக்களுக்கும் சமுதாயத்திற்கும் அது வளர்ச்சியைத் தரும். அவன் சேர்ந்த இனம் நன்றாகக் செய்ற்பட, எல்லாவகையான புகழும் கிட்டும். மனநலம் ஒருவனின் நெஞ்சத்தைச் சான்றாண்மைப் பண்புடன் வைத்திருக்கும். ஒருவன் தன் இனநலனுக்காக தன்னை வருத்தி வாழும் ஒருவன், அவர்களுக்கு ஈகை கொடுத்து, காப்பாற்றினால், அந்த மக்களின் இனநலமும் காக்கப்படும்.

5. அழியாத புகழ் பெறுவது.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் (குறள் 233)

நிலையில்லா இவ்வுலகத்தில் உயர்ந்து புகழ்பெற்று நிலைத்து வாழ்வதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. உயர்ந்த புகழ் என்பதால், எமக்கு வரும் துன்பங்களால், எம்மை வருமுன்னரே காப்பதாகும். அதிலும், நாம் குற்றம் செய்யாது, நல்லவராக இருந்து மற்றவர்க்கு வழிகாட்டுவது. விருந்தோம்பிப் பிறரைப் பாதுகாப்பது, ஒருவரைப் பார்த்த அளவில், அவரின் துயரை அறிந்து அவருக்கு உதவுவது. இப்படிச் சில அரிய செயல்களால் உலகத்தில் புகழை அடையலாம்.

6. விரும்பும் துறையில் தகுதிப்பாட்டுடன் தோன்றிப் புகழ் பெறல்.

தோன்றிற் புகழொடு தோன்றுக (குறள் 236)

ஒரு செயலைச் செய்து அதனை வெற்றி கொள்ளும் போது, பேரும் புகழும் நம்மைத் தேடி வரும். இப்படிப் புகழ் பெற்று, வாழ்வில் வெற்றி கொண்டோரை நாம் இன்றும் போற்றுகிறோம். புகழ்கின்றோம். கரும வீரர் காமராஜர் அதிகம் படிக்காத போதும், கல்வி வளர்ச்சிக்கு வேண்டிய பல அரிய செயல்களைச் செய்து, கல்வித் திட்டத்தை மேம்படுத்தினார். நாட்டில் பல நல்ல திட்டங்களைச் செய்றபடுத்தி, நல்ல அரசியல் தலைவராக விளங்கினார். அதனாலேயே இன்றும் அவர் புகழுடம்புடன் இவ்வுலகில் வாழ்கின்றார்.

7. புகழ் பெற வாழ்வது

புகழ்பட வாழாதார் தந்நோவார் (குறள் 237)

ஒருவர் எப்படிப் புகழைச் சேர்ப்பது என அறியாது, புகழ் பெறும் பிறரைப் பார்த்ததும், அப்படியான புகழ் தம்ககுக் கிட்டவில்லை என மனம் நொந்து கொள்வதுண்டு. மேலும் தாம் புகழ் பெறாமல்,தம்மை இகழ்வாரை நோவது ஏன் என கேள்வியை எழுப்புகிறார் திருவள்ளுவர்.

8 புகழ்ந்தவை போற்றிச் செய்து புகழ் பெறல்

புகழ்ந்தவை போற்றில் செயல்வேண்டும் (குறள் 538)

குற்றமில்லாத ஒருவர் பெரியவர் போற்றும் நல்ல செயல்களைக் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாதவிடத்து, எக்காலத்திலும் அவருக்குப் புகழ் வந்து சேராது. ஒழுக்கத்தில் உயர்ந்தவராய், நடுநிலைமை கொண்டவராய், இருத்தல் வேண்டும். இகழ்ந்தவர் எனப்படுபவர், குற்றத்தைத் தொழிலாகக் கொண்டு, பிறரைத் துன்புறுத்தி வாழ்பவர். மதுவுக்கு, மாதுவுக்கு அடிமையானவர்கள். உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் புகழ் பெற வேண்டும் என எண்ணுகிறார் திருவள்ளுவர், உலக மக்கள் அமைதியாக வாழவும் புகழ் பெறும் உரிமை கொண்டவர்களாகவும் முடியும் என விளக்குகிறார்.

9. ஒவ்வொருவர்க்கும் உரிய புகழ்

வசையிலா வண்பயன் குன்றும் (குறள் 239)

புகழ் பெறாத ஒருவனின் உடலைச் சுமந்த நிலமும் தன் குறைவற்ற பயன்பாட்டில் தகுதி குன்றிப் போகும் எனவும், புகழ் சேர்க்காத ஒருவனை இந்நிலம் சுமக்கிறதெ எனவும் வருந்தியபடி கூறும் திருவள்ளுவர், மண் சுமக்க வேண்டும் என்றால் நிச்சயம் ஒருவன் புகழ் பெறும் உரிமையுடன் வாழ வேண்டும் எனக் கூறுகிறார்.

10. புகழ் பெற்று வாழும் வாழ்க்கை வாழல்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் (குறள் 240)

பழியில்லாது வாழ்பவர்க்கு நிலைத்த வாழ்வு நிலைக்கும். ஆனால், புகழ் இல்லாது வாழ்பவர்க்கு, நிலைத்த வாழ்வு இல்லை எனக் கூறுகிறார் திருவள்ளுவர். நிலைத்த வாழ்வு அடைய, பிறர் நம்மைப் புகழ்ந்து பேசும் அளவுக்கு ஒவ்வொருவரும் உரிமை பெற்று வாழல் வேண்டும் என்பது திருவள்ளுவரின் துணிவு ஆகும்.

11. தலைவி தலைவனைப் புகழல்

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு (குறள் 1199)

தாம் விரும்பியவர் தம்மிடம் அன்புடையவராக இல்லை எனினும் அவரது புகழைக் கேட்பது காதுக்கு இன்பம் எனக் காண்கிறாள் காமத்துப்பால் தலைவி. வேண்டியவர், வேண்டாதவர், நல்லவர் தீயவர் என மாறுபாடு இல்லாது, அவர் புகழ் பற்றி அறிந்து, உள்ளம் உவமை கொண்டு வாழத் துணியும் தலைவியைப் படைத்துள்ளார் திருவள்ளுவர்.

12. உயிர்க்கு ஊதியம் ஆகும் ஈகை செய்து புகழ் பெறல்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது (குறள் 231)

ஒருவன் இப்புவியில் பிறந்த பயனை அடைய வேண்டின், ஏழைகளுக்கு உதவல் வேண்டும். அதனால், புகழ் பெற்று வாழல் வேண்டும். இதை விடப் பிறப்பின் பெரும் பேறு வேறு இல்லை எனவே பிறர்க்கு உதவி வாழாதார், இந்தப் புவியில் பாரமாக இருப்பர் எனக் கூறுகிறார் திருவள்ளுவர்.

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் ( குறள். 238)

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும். எனவே புகழ் பெற்று வாழ்வது மிகவும் அவசியம் என்பதை அறிவோம்.

புகழின் அதிகப்படியான மற்றும் அதன் பற்றாக்குறை இரண்டும் தனிநபருக்கு எதிர்மறையானதாக இருக்கும் என்பதைக் குறிப்பிடுவது முக்கியம். யாரோ பெறும்போது பாராட்டுக்கு மேலும் பாராட்டும் கிட்டும். தற்பெருமை மற்றும் தங்களை மற்றவர்கள் மேன்மையாக நம்புவர். எந்தப் புகழையும் பெறாவிட்டால், நீங்கள் செய்யும் செயலுக்கு எந்த தகுதியும் இல்லை, உங்கள் சுயமரியாதை வீழ்ச்சியடையும் என்று நீங்கள் உணருவீர்கள். புகழ் பெறவேண்டியவர், ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க வேண்டும்.

இதனையே “புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்” எனக் கூறுகிறது புறநானூறுப் பாடல். (புறநானூறு 182)

திருக்குறள் ஒரு உலக நூல் எனக் கூறுலாம்

இக்கட்டுரை, தனி மனிதன், குடும்பம், சமுதாயம், நாடு, உலக நாடுகள் எனும் பாகுபாட்டை விளக்கிக் கூற முற்பட்டுள்ளதால், இது உலகப் பொதுமறை எனச் கூறக்கூடியதாக உள்ளது. மேலும், சாதி, இனம், மதம், மொழி, அரசியல், நாடுகள் போன்ற செயற்கைக் காரணிகளைக் கடந்து, உலகம் முழுமைக்கும் பொதுவாகி நிற்கின்றது.

நிறம், உருவம், ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், இளையவர், முதியவர் எனும் இயற்கை எல்லைகளைக் கடந்து, உலகில் வாழும் எல்லார்க்கும் பொருந்தும் தகுதிப்பாட்டைக் கொண்டு உயர்ந்து நிற்கின்றது. எனவே இக்கட்டுரை உயர்ந்த சிந்தனையைச் சுட்டிக் காட்டுவதால், “திருக்குறள் உலக நூல்” என்பதை நிறுவி நிற்கின்றது.

ஆய்வின் முடிவாக

இவ்வுலகில் புகழ் பெறும் உரிமை அனைவர்க்கும் உண்டு என்பது இவ்வாய்வின் முடிவாகும். அதிலும் ஈகை செய்து புகழ் பெற்று வாழ்தல் முக்கிய முடிவாகவும் பெறப்பட்டுள்ளது.

முடிவுரை

இவ்வுலகில் பிறந்த அனைவரும் நேர்மையாக உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும். அப்பொருளைத் தகுதி வாய்ந்த ஏழை மக்களுக்கு கொடுத்து, அவரையும் பிறர்க்குக் கொடுத்து வாழத் தூண்ட வேண்டும். இதுவே சமுதாய நோக்கு, பொருள் நோக்கு, சமநோக்கு என உணர்ந்து இதன் மூலம் புகழ் பெற்று வாழல் வேண்டும் என்பது முடிவான கருத்தாகும்.

Dr. புட்பா கிறிட்டி, pushpachristy@gmail.com
துணை நின்ற நூல் திருக்குறள். டாக்டர். மு. வரதராசன்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>