திருச்சி கிழக்கு தொகுதி: விஜய் ராஜினாமா

Share

தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் விஜய் ஈடுபட்டார். இந்தநிலையில், தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். திருச்சி கிழக்கு ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலாளரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்றிருந்தார் . முதல்-அமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்துள்ளதால் விரைவில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>