நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் – தமிழக அரசு அரசாணை

Share

தமிழ்நாட்டின் 12-வது முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்று இருக்கிறார். இதன் மூலம் கடந்த 5 நாட்களாக நொடிக்கு நொடி நடந்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய விஜய், அடுத்த 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து அசத்தியிருக்கிறார். அவரது பதவியேற்பு விழா காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முதல்-அமைச்சராக பதவியேற்ற விஜய், 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி முதலாவதாக, 500 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர்களுக்கு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பில் முதல்-அமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். இதற்கிடையில், வெளியிடப்பட்டுள்ள புதிய உத்தரவால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் மினசாரம் இலவசமாகவும் கணக்கிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>