‘தி ஒடிசி’ திரைப்படம் ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி வசூலித்தது

Share

‘தி ஒடிசி’ திரைப்படம் ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி வசூலித்தது. புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ தி ஒடிசி’ திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது. மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘தி ஒடிசி’ திரைப்படம், இந்தியாவில் முதல் நாளில் மட்டும் ரூ.20.76 கோடி மொத்த வசூலையும், ரூ.17.40 கோடி நிகர வசூலையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் அசுரத்தனமான வரவேற்பை இந்த வசூல் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது. இந்நிலையில், தி ஒடிசி படத்தின் வசூல் இந்தியாவில் மட்டும் இதுவரை 100 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.  உலக அளவில் 3 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது என வார்னர் ப்ரோஸ் இந்தியா என்ற வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>