நடிகர் விஜய்யின் ஜனநாயகன் முதல் நாளில் ரூ. 41 கோடி வசூலானது

Share

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் முதல் நாளில் ரூ. 41 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான ‘ஜனநாயகன்’ தணிக்கைச் சான்றிதழ் அனுமதி பெற்று உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.41 கோடி வசூல் புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எச். வினோத் இயக்கியுள்ள இந்த படம், தேர்தலுக்கு முன்னதாக கடந்த பொங்கல் அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக வெளியீடு தேதி தள்ளிப்போனது. கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வெளிநாடுகளில் மொத்தமாக ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக வர்த்தக கண்காணிப்பு இணையதளம் ஒன்று கூறியுள்ளது. இருந்தபோதிலும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தால், விஜய்யின் முந்தைய வெற்றிப் படங்களான ‘பீஸ்ட்’ மற்றும் ‘கோட்’ ஆகியவற்றின் தொடக்க வசூலை எட்ட முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. வர்த்தக கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜனநாயகன் திரைப்படம் 13,067 காட்சிகளில் மொத்தமாக ரூ. 41 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவின் மொத்த வசூல் இதுவரை ரூ. 48.27 கோடியாகவும், மொத்த நிகர வசூல் ரூ. 41 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இப்படம் மொத்தம் ரூ.30 கோடி வசூலித்துள்ளது, இதன்மூலம் அதன் மொத்த உலகளாவிய வசூல் ரூ. 78.27 கோடியாக உயர்ந்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>