‘தி பாரடைஸ்’ படம் முதல் நாளில் ரூ.88 கோடி வசூல் செய்துள்ளது

Share

‘தி பாரடைஸ்’ படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.88 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி தனது 33-வது படமான ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ‘தசரா’வைப் போலவே நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகி உள்ளது. இதில் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தநிலையில், இந்தபடம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.88 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>