துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அசாம் பயணம் மேற்கொண்டார்

Share

துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அசாம் பயணம் மேற்கொண்டார். துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவர் 2 நாட்கள் பயணமாக அசாம் சென்றுள்ளார். டில்லியில் இருந்து காலை விமானம் மூலம் அசாம் தலைநகர் கவுகாத்தி சென்றார். அங்கு அவரை முதல்-அமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா, ஆளுனர் லக்‌ஷ்மன் பிரசாத் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றனர். இதையடுத்து கீதாநகர் கல்லூரி பொன்விழாவில் பங்கேற்ற துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்ரீமந்த சங்கரதேவ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அவர் இன்று கவுகாத்தில் உள்ள காமாக்கியா கோவிலில் வழிபாடு செய்கிறார். மேலும், கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>