துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் பதிவேற்றம் வெளியானது

Share

 நடிகர் துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் பதிவேற்றம் வெளியாகியுள்ளது. மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். மலையாள சினிமாவில் மம்முட்டியின் மகன் என்பதைத் தாண்டி, தன்னுடைய நடிப்புத் திறமையாலும், கதைத் தேர்வாலும் முன்னணி நடிகராக வலம் வருபவர். ‘வாயை மூடி பேசவும்,’ ‘ஓகே கண்மணி’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இவரின்‘ஐயம் கேம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகிறது. மேலும், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்திலும் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

துல்கர் சல்மான் 41-வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ரவி நெலகுதிதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில், பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவும் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் முதல்காட்சி  பதாகை நாளை (ஜூலை 10) காலை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>