மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமையல் எரிவாயு தோம்புகளால் ஆட்சியர் எச்சரித்துள்ளார்

Share

மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமையல் எரிவாயு தோம்புகளால் ஆட்சியர் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன முதல் மிக கனமான மழை பெய்யக்கூடும். மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ராய்காட் மாவட்டம் சாவ்ணே பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் எரிவாயு தோம்பு நிரப்பு மையத்தின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த சுமார் 3,000 சமையல் எரிவாயு தோம்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்றின் கரையோரங்களில் மிதந்து வந்த எரிவாயு தோம்புகளை பொதுமக்கள் சிலர் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றனர். அடித்துச் செல்லப்பட்டதில் சில எரிவாயு தோம்புகள் முழுமையாக நிரப்பட்டது என்பதால் அவை வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது என ராய்காட் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். எடுத்துச் செல்லப்பட்ட எரிவாயு தோம்புகளால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து மக்கள் உடனே அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>