தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், நம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதுவரை 52 இயக்கங்கள், சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் நேரில் வந்து தங்களுடைய முழுமையான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. அவர்களுடைய இந்த உறுதியான ஆதரவிற்காக, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, நன்றி கடிதங்களை வழங்கினேன். இதில் 18 இயக்கங்கள் மற்றும் கட்சிகள் நேரில் கலந்து கொண்டு நன்றி கடிதங்களை பெற்றுக்கொண்டன. மீதமுள்ள அமைப்புகள் தேர்தல் பணிகளில் பல்வேறு இடங்களில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதால், அவர்களுக்கும் இன்றைய தினமே நன்றி கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்படுகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உறுதியுடன் செயல்பட்டு, இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை மாற்றுவதற்கான இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கையுடன் முன்னேறுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜ கூட்டணிக்கு இதுவரை 52 இயக்கங்கள், சிறு கட்சிகள் ஆதரவு – நயினார் நாகேந்திரன்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>