த.மா.கா.வுக்கான தொகுதிகளை அ.தி.மு.க. அறிவிக்கும் – ஜி.கே.வாசன்

Share

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.  அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கான தொகுதிகள் இன்னும் முடிவாகாமல் உள்ளது. நேற்று இரவு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசிய த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகி விட்டதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் காலை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். பின்னர் பேட்டி அளித்த அவர், ‘த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றிய விவரங்களை அ.தி.மு.க. தலைமை அறிவிக்கும்’ என்று தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>