நிரஞ்சனின் “மிஸ்டர் பாரத்” படத்தின் “மல்லிகை மொட்டு” பாடல் வெளியானது

Share

நிரஞ்சனின் “மிஸ்டர் பாரத்” படத்தின் “மல்லிகை மொட்டு” பாடல் வெளியானது. ‘பைட் கிளப்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான லோகேஷ், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தை தயாரித்து வருகிறார். அதனை தொடர்ந்து, ‘மிஸ்டர் பாரத்’ என்ற புதிய படத்தையும் லோகேஷ் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார்.இயக்குனர் நிரஞ்சன் இயக்கி வரும் இந்த படத்தில் ‘கட்சி சேர’ புகழ் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் முதல்காட்சி பதாகை வெளியாகி, மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரியில் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் பின்னணி பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இப்படத்தின் பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். இந்நிலையில், ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ‘மல்லிகை மொட்டு’ பாடல் வெளியானது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>