பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படம் ஜீலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கிவருகிறார். இவர் இயக்குநர் லஷ்மணிடம் போகன் மற்றும் பூமி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து உருவாக்கியுள்ளனர். இன்றைய இளைஞர்களின் உணர்வுகளை நவீன கோணத்தில், மனதைத் தொடும் வகையில் சொல்லும் காதல் கதையை கொண்ட இந்தப் படத்தின் முதல்காட்சி பதாகையை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ‘இப்படத்தின் ‘பிரோக்பாய்’ காணொளி பாடல் வெளியானது. இப்பாடலை பிரதீப் பிஜே எழுதி பாடியுள்ளார். ‘லவ் ஓ லவ்’ படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 26ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், ‘லவ் ஓ லவ்’ படம் ஜீலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பவிஷ் நடிக்கும் “லவ் ஓ லவ்” திரைப்படம் ஜீலை 10ம் தேதி வெளியாகிறது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>