பாண்டிராஜின் “பரிமளா & கோ” படத்தின் முன்னோட்டம் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது

Share

பசங்க’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், “வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா” என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது. இவர் தற்போது ‘பரிமளா & கோ’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜியார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கான பின்னணி பணிகளை நடிகர் ஜெயராம், மிஷ்கின், சாண்டி, யோகி உள்ளிட்டோர் நிறைவு செய்துள்ளனர்.  இப்படத்தின் ‘வாச்சா உடாத’ காணொளி பாடல் வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி, விமல், சீமான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், ‘பரிமளா & கோ’ படத்தின் முன்னோட்டம்  வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>