பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் பயணம்

Share

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் அதிபர் லம் கடந்த 6ம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்தார். அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு முறை பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது வியட்நாம் பாதுகாப்புத்துறை அமைச்சரை ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு, ஆயுத விற்பனை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும், இந்தோ-பசுபிக் கடல் பகுதியில் இரு நாடுகளும் இணைந்து பாதுகாப்பு, நிலைத்தன்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. வியட்நாம் பயணத்தை நிறைவு செய்யும் ராஜ்நாத் சிங் அங்கிருந்து தென்கொரியா செல்ல உள்ளார். தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்திக்கும் அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>