ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம் – டிரம்ப் அறிவிப்பு

Share

ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்தநாடு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் மீதும், அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியா, அமீரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தியது. சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வளைகுடா போர் சுமார் 40 நாட்கள் நீடித்தது. பின்னர் இருதரப்பும் கடந்த மாதம் 8-ந்தேதி தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்தன. அது தற்போது வரை அமலில் இருக்கிறது. இந்த போர் ஈரான், லெபனான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் சுமார் 6 ஆயிரம் பேரை பலி கொண்டது. தற்போது வளைகுடா பிராந்தியத்தில் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் பதற்றம் ஓயவில்லை. ஈரானின் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டு இருப்பதாலும், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதாலும் அங்கே முழுமையான அமைதி ஏற்படவில்லை. மறுபுறம் ஈரான்-அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்படுவதிலும் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இதனால் எந்த நேரத்திலும் மீண்டும் போர் மூளலாம் என்ற அச்சம் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி சர்வதேச நாடுகள் மத்தியிலும் நிலவி வருகிறது. இதை மேலும் அதிகரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்பும், நேற்று தனது சமூக வலைத் தளத்தில் மறைமுக மிரட்டல் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் , சவுதி அரேபியா தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீது நாளை நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>