பிலிப்பைன்ஸ் நாட்டின் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியானார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் சான் ஜோஸ் நேஷனல் என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் காலை பள்ளி தொடங்கி நடந்தபோது, 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில், பள்ளியில் இருந்த மாணவர்கள் 3 பேர் பலியானார்கள். தவிர 5 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 2 பேரை காவல்துறை பிடித்து, விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் 2 பேரும் ஆண்கள். இந்த துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அந்த பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியானர்கள்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>