ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் உங்கள் நாடே இருக்காதென ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்

Share

ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால், உங்களுக்கே ஒரு நாடு இருக்காதென ஈரானுக்கு மீண்டும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.   அமெரிக்கா – ஈரான் பிரதிநிதிகள் இடையே சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல் சுற்று பேச்சுவார்த்தை நேற்று இரவு நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, ஹார்முஸ் ஜலசந்தி திறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய இரு நாடுகளுக்கும் இடையே நேரடி தகவல் தொடர்பு வழிகளை ஏற்படுத்தவும், லெபனானில் நடைபெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவும் ஒப்புதல் எட்டப்பட்டதாக மத்தியஸ்த நாடுகளான கத்தார் மற்றும் பாகிஸ்தான் கூறின. சுவிட்சர்லாந்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருக்கும் நேரத்திலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளார். நேற்று செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்லும் போக்குவரத்தில் ஈரான் தலையிட்டால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதோடு, ஜலசந்தியின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றுவோம். நீங்கள் ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால், உங்களுக்கே ஒரு நாடு இருக்காது என்று ஈரான் அதிகாரிகளிடம் நான் கூறினேன்” என்று டிரம்ப் எச்சரித்து இருக்கிறார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>