மனைவி மறைந்த மனவேதனையில் மலேசிய முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Share

மனைவி மறைந்த மனவேதனையில் மலேசிய முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மலேசியாவில் மிக நீண்டகாலப் பிரதமராகவும், நவீன மலேசியாவின் சிற்பியாகவும் திகழ்ந்தவர் மகாதிர் முகமது. இவருக்கு தற்போது 101 வயதாகும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தான் தனது மனைவி சித்தி ஹாஸ்மாவுடன் 70-வது திருமண நாளை நெகிழ்ச்சியோடு கொண்டாடினார். ஆனால், கடந்த திங்கட்கிழமை அவரது மனைவி சித்தி ஹாஸ்மா (100 வயது) திடீரென உயிரிழந்தார். மனைவியின் இறுதிச்சடங்கின்போது, மகாதிர் முகமது கண்ணீர் மல்கக் கதறி அழுதது ஒட்டு மொத்த மலேசியாவையும் உலுக்கியது. இந்நிலையில், மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கடும் மனவேதனையில் இருந்த அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய சிகிச்சை மையத்தில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>