நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இணைந்து ‘பைரவா’, ‘சர்கார்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது தொடர்பாக கீர்த்தி சுரேஷ், தனது பதிவில், “இத்தனை ஆண்டுகளாக உங்கள் பிறந்த நாள் என்பது படத்தின் முதல்காட்சி பதாகை, முன்னோட்டம் அல்லது ஒரு படத்தின் அறிவிப்பாக இருந்தது. அதை எதிர்பார்த்து காத்திருப்பது எங்களுக்கு ஒரு சடங்கு. ஆனால், இந்த வருடம் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முதல் முறையாக, இந்த உலகிற்கு ஒரு புதிய கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாம் காண்கிறோம். நீங்கள் திரையில் ஹீரோவாக உங்களை அறிமுகப்படுத்தவில்லை. மாறாக, சேவை மற்றும் பொறுப்புணர்வு மிக்க தலைவராக புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த ஆண்டு நாம் புதிய பயணத்தை கொண்டாடுகிறோம். என்றென்றும் நம் நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய்க்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன நடிகை கீர்த்தி சுரேஷ்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>