விஜய் சேதுபதி நடித்த ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைகிறது. ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிக முக்கியமான இயக்குனராக முத்திரை பதித்த தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தியாகராஜன் குமாரராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில், கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்று கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த பிறகு, ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி நடித்த ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு நிறைவடைகிறது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>