மு.க.ஸ்டாலினை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் திரையுலகினர் சந்தித்தனர். இது தொடர்பாக, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகி சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழ் திரையுலகில் இயக்கம் மற்றும் திரைக்கதை துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் ஆகியோரின் கலைப்பயணத்தையும் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்” விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>