தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி மற்றும் சிவஞானம் ஆகியோருக்கு புதிய பொறுப்புகளை வழங்க தலைமைச் செயலாளர் சாய்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக கஜலக்ஷ்மிக்கு பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணி தலைமைச் செயலாளர் பணிக்கு ஈடான பொறுப்பும், அந்தஸ்தும் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>