‘மூன்றாம் பிறை’ 44 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியாக உள்ளது. இயக்குனர் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் காந்திமதி, சில்க் ஸ்மிதா, கே. நடராஜன், பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.ஆர். வீரராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும், கவிஞர் கண்ணதாசன் பணியாற்றிய கடைசி திரைப்படமாகவும் இது குறிப்பிடப்படுகிறது. காதல் கதையை மையமாக கொண்டு உருவான இந்த படம், வெளியாகி 330 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் சிறப்பான நடிப்புக்காக கமல்ஹாசன் தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை (ஸ்ரீதேவி), சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த படம் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகளை வென்றது. இந்த நிலையில், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’ திரைப்படம், அமேசான் பிரைம் காணொளி ஓடிடி தளத்தில் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
‘மூன்றாம் பிறை’ திரைப்படம் மீண்டும் ஒடிடியில் வெளியாகிறது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>