‘திரிஷ்யம் 3’ படம் 24 மணி நேரத்திற்குள் 3 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியது

Share

நடிகர் மோகன்லால், மீனா, ஆஷா சரத் உட்பட பலர் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘திரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் உருவாகி வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூன்றாம் பாகமாக ‘திரிஷ்யம் 3’ தயாராகியுள்ளது. வரும் மே 21 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்திற்கான முன்னோட்டம் வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், சுமார் 3 மில்லியன் வியூஸ்களை யூடியூப்பில் பெற்றுள்ளது. படத்தைக் காண ஆர்வமாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>