யாழ்ப்பாணத்தில் பிறந்து நான்கு மாதங்களில் உயிரிழந்த ஆண் குழந்தை!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளது. வரணி – இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில் அன்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை 24ம் திகதி அன்று அதிகாலை உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>