யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து வீடு வந்தவர் திடீர் மரணத்தை தழுவியது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்ட கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட அன்றைய தினம் திடீரென மயங்கி விழுந்ததால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் சந்தேக நபரான இளவாளைப் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய ஜெயன் என்பவரே இவ்வாறு மரணம் அடைந்துள்ளார்.

குறித்த கைதி சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாட்களில் நோய் வாய்ப்பட்டு இருக்கலாம் என வீட்டார் சந்தேகம் வெளியிடுகின்றனர். இந்நிலையில் சிறைச்சாலை நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>