ரத்னகுமார் இயக்கும் திரைப்படம் “29”

Share

கார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அவினாஷ், மாஸ்டர் மகேந்திரன், கிரண், சிந்து சியான், பிரேம்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, ஆறுமுகவேல், ஷினாஸ் பாத்திமா, சதிஷ்குமார், ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப், அனுஶ்ரீ வேலன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “29”. மனிதனின் 29 வயதில் நடக்கும் வாழ்வியலை பற்றி சொல்கின்ற படம். காதல், குடும்பம், தொழில், சமுதாய சிந்தனை ஆகியவற்றில் சந்திக்கும் பிரச்சனைகளின் உள்ளடக்கத்தை கவிதை நடையில் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். விவசாயத்தில் முதுகலை பட்டம் பெற்றவரான விது, விவசாயத்தை விட்டுவிட்டு, சென்னையில் தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ப்ரீத்தி அஸ்ராணி, விது மீது காதல் வசப்படுகிறார். இருவரும் காதலிக்கிறார்கள். சேலத்தில் தனது பெற்றோர்களுக்கு ஏற்படும் வாழ்வியல் சிக்கல், மற்றும் ஊர் பிரச்சனை இவையெல்லாம் அவருக்கு தெரிய வருகிறது. இத்னால் மனக்கவலையில் உணர்ச்சிவசப்படுகிறார் விது. ஆனால் பிரித்தி அஸ்ராணி விதுமீது அளவுமீறி அன்பு காட்டுகிறார். தன் குடும்ப பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் விது தனது உயிருக்கும் மேலாக அன்பு காட்டும் காதலியை கண்டு கொள்வதில்லை. ஆனாலும் அன்பு வைத்திருக்கிறார். அந்த அன்பை பறிமாறிக்கொள்ள விதுவுக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் ப்ரித்தி அஸ்ராணி காதலை முறித்துக் கொள்ளலாம் என்று விதுவிடம் கூறிவிட்டு சென்று விடுகிறார். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை. இது ஒரு எதார்த்தமாக மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள்தான். அதை அழகான கவிதை நடையில் படமாக்கப்பட்டிருக்கிறது. வார்த்தை ஜாலங்களால் வசனங்களை எழுதியுள்ளார் இயக்குநர். விதுவும் ப்ரித்தியும் ஒரு விடுதியில் தங்க நேரிடுகுறது. விடுதிக்கு வெளியே மழை பொழிகிறது. அறைக்குள் இளம் காதலர்கள். இதமான சூழ்நிலையில் காம உணர்ச்சி மேலோங்கி ப்ரியா தவிக்கிறாள். இதை அறிந்த காதலன் விது, தவறு நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் அறையை விட்டு வெளியே வந்து மழையில் நனைகிறார். பிறகு அறைக்குள் செல்கிறார். அங்கே மோகத்தில் துடித்துக் கொண்டிருக்கும் காதலியிடம் தாலி கட்டிய பிறகுதான் இதெல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்கிறார் விது. அதற்கு ப்ரியா, “தொட்டு தாலிகட்டினால் என்ன, தொட்டுவிட்டு தாலிகட்டினால் என்ன”? என்று கூறுகிறாள். இப்படி பல வசனங்கள் படத்தில் கவிதையாக இடம் பெறுகிறது. விதுவுக்கு இப்படம் முதல் படம்தான். ஆனால் அது தெரியாத அளவுக்கு முதிர்ச்சி பெற்ற நடிகராக திரையில் கதாபாத்திரத்தோடு ஒன்றிபோய் இருக்கிறார். அழகுக்கு ராணியாகவே இருக்கிறார் ப்ரியா அஸ்ராணி. குடும்ப சூழ்நிலைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கின்ற காட்சியில், இளஞர்களின் மனதில் நிரம்பி முழு இதயத்தையும் அபகரித்துக் கொள்கிறார். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது. இயக்குநரின் கற்பனையை தனது காமிராவில் காண்பித்திருக்கிறார். சதிஷ்குமாரின் படத்திகுப்பு பார்வையாளர்களை சோர்வடையாமல் பார்த்துக் கொள்கிறது. சென் ரோல்டனின் இசை தூக்கலாக இருக்கிறது. 29 வயதில் நடக்கும் ஒரு வாழ்வியலை கவிதை நூலாக திரையில் காட்டிதிருக்கும் இயக்குநர் ரத்னகுமார் பாராட்டுதலுக்குரியவர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>