விஜய் முதல்-அமைச்சராவதில் தொடரும் சிக்கல் – தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி

Share

நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அருகேயுள்ள புதுமை கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47 வயது). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைக் கழக செயலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக வேண்டி, சுமார் 16 அடி நீளம் கொண்ட வேலை அலகாகக் குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தித் தனது தீவிரப் பற்றை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதல்-அமைச்சராக முடியாத சூழல் நிலவி வருவதால் மனமுடைந்த இச்கியப்பன், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இசக்கியப்பன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>