ரஷியாவின் தாக்குதலுக்கு மத்தியில் ஜெர்மன் பிரதமர் உக்ரைனுக்கு சென்றார்

Share

ரஷியாவின் தாக்குதலுக்கு மத்தியில் ஜெர்மன் பிரதமர் பிரடெரிக் மெர்ஸ் உக்ரைனுக்கு சென்றார். ரஷியா-உக்ரைன் போர் சமீப காலமாக தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நகர்களை குறிவைத்து ரஷியா தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷியாவின் எண்ணெய் கட்டமைப்புகளை உக்ரைன் குறிவைத்து உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் ஜெர்மன் பிரதமர் பிரடெரிக் மெர்ஸ் நேற்று உக்ரைன் சென்றார். தலைநகர் கீவில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய அவர், போரில் தனது ஆதரவையும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெர்ஸ், ‘ரஷியாவை தடுக்காவிட்டால், அதன் போர் எந்திரம் காலப்போக்கில் நமக்கு எதிராகவும் திரும்பும்’ எனக்கூறினார். மேலும் உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வழங்கவும் உறுதியளித்தார்.உக்ரைன் போர் தொடங்கியது முதல் அந்த நாட்டுக்கு அதிக உதவிகளை வழங் கிய நாடாக ஜெர்மனி விளங்குகிறது. இதுவரை 48.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களாக உக்ரைனுக்கு ஜெர்மனி உதவி இருக்கிறது. ஜெர்மனியின் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஜெலன்ஸ்கி, ரஷி யாவை இணைந்து தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>