விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” படம் ஜூன் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது

Share

இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் விஜய் ஆண்டனி. ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக, இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, விஜய் ஆண்டனி மற்றும் சசி கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. உணர்வுபூர்வமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ‘நூறு சாமி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடலின் தாக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்த தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா மற்றும் லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முதல்காட்சி பதாகையை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ‘நூறு சாமி’ திரைப்படம் வரும் ஜூன் 19-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>