ஸ்மித் மச்சாரை பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Share

ஸ்மித் மச்சாரைப் பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற பயணிகள் விமானத்தை அதன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கடத்த முயன்றதை, இந்திய விமானி ஸ்மித் மச்சார் வீரத்துடன் தடுத்தார். பயணிகள் உதவியுடன் துணை விமானி மடக்கிப் பிடிக்கப்பட்டார். தாக்குதலில் படுகாயமடைந்து ஸ்மித் மச்சார், தற்போது அபுதாபியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சூழலில், ஸ்மித் மச்சாரைப் பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில் ஜோஷ் காட்ஹைமர், டான் பேகன், மைக்கேல் மெக்கால் ஆகிய எம்.பி.க்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தனர். விமானப்பயணிகளின் உயிரைக் காக்க ஸ்மித் மச்சார் காட்டிய அசாதாரண தைரியத்துக்கு இந்த தீர்மானம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கண்டித்துள்ள அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகள் இவ்விவகாரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>