2026-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு கனடாவின் ஆனி கர்சனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி என 6 முக்கிய துறைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 5-ம் தேதி தொடங்கி தினமும் ஒரு துறைக்கு வரும் 12-ம் தேதி வரை பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகெமன், ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு வழங்கப்பட்டது. ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு இவர் முக்கிய பங்களிப்பு ஆற்றினார். நேற்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்சின் ஹென்றி ககன் மற்றும் ஜப்பானின் கென்சோ சோவா ஆகிய ஆய்வாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு கனடாவை சேர்ந்த ஆனி கர்சனுக்கு வழங்கப்பட்டது. சமகால இலக்கியத்திற்கு புதிய வடிவங்களை உருவாக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2026-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஆனி கர்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>