LOADING

Type to search

இந்திய அரசியல்

பாரதம் தர்மத்தின் அடிப்படையிலானது – ஆளுனர் ஆர்.என்.ரவி

Share

சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் ஒப்பிட்டு கவிதை நோக்கில் ஆய்வு செய்யும் பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. இதில் திருவள்ளுவர் கபீர், தாசர் வேமனா ஆகிய மூவரின் மொழியியல் மற்றும் இலக்கிய திறன் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுனர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

இந்த 2 நாட்கள் அறிவுசார் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் வெவ்வேறு இடத்தில் இவர்கள் பிறந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையை இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்திய இலக்கியங்களை எந்த மொழியில் படித்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கும். எப்படி ஒற்றுமையோடு வாழ முடியும் என்பதை கோடிட்டு காட்டப்பட்டிருக்கும்.

இன்றைய கல்வி முறையில் நாம் பாரதம் என்றால் என்ன என்று நம் குழந்தைகளுக்கு சொல்வது இல்லை. இந்தியாவை தான் சொல்லி தருகிறோம். பாரதம் என்பது இந்தியாவை விட பெரியது. பாரதம் என்பது பொலிட்டிகள் ஸ்டேட் அல்ல. ஐரோப்பிய வகைப்படுத்துதலே பொலிட்டிகள் ஸ்டேட். பாரதம் அதை விட பெரியது. பாரதம் இந்தியாவை விட பழமையானது. பாரத் என்று அழைக்கும் போது அரசியல் நாடு இல்லை. ஆனால் இந்தியா என்று அழைக்கும்போது பொது அரசியல் இருக்கிறது. ஒரு மரத்தின் இரு இலைகள் ஒன்று போல் இருப்பது இல்லை. ஆனால் அது வேறு வேறானவை அல்ல. அது போல பாரதம் என்பது பிரிக்க முடியாதது. ஆனால் வேறு வேறானவை. ஆனால் ஒன்றானது அதனை பிரிக்க முடியாது. பாரதம் என்பது மதத்தின் அடிப்படையிலானது இல்லை. தர்மத்தின் அடிப்படையிலானது. மதங்கள் அனைத்தும் சமம் என சொல்வது அரசியல் வாதம். ஒவ்வொரு மதங்களும் வெவ்வேறு கூறுகள் கொண்டவை. தர்மம் தான் அனைத்தையும் இணைப்பது. பாரதம் என்றால் சாதி, மதம் இல்லை. பாரதம் என்பது தார்மீக தர்ம நாடு. நாம் எல்லாம் ஒரே குடும்பம் என்பதே பாரதம். இந்த ஒற்றுமையை இந்த மூன்று புலவர்களும் சொல்லி உள்ளதை பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Previous Article