LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம்- சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மாணவன் உயிரிழப்பு!

Share

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் 05-12-2024 அன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். இதன்போது மூளாய் பகுதியைச் சேர்ந்த மு.சிறிபானுசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இரண்டு மாணவர்கள் அன்றையதினம் வகுப்பிற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். இதன்போது மறந்துபோய் வீட்டில் விட்டுச் சென்ற பணத்தினை எடுப்பதற்காக திரும்பி வந்துகொண்டிருந்தவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார். மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.