LOADING

Type to search

உலக அரசியல்

200 உக்ரைன் ராணுவ வீரர்கள் ஒரே நாளில் கொலை – ரஷியா தகவல்

Share

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022-ம் ஆண்டில் தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை பின்னர் உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் பலன் ஏற்படவில்லை. போரில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை உக்ரைன் அரசு கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. இதேபோன்று வடகொரியா நாடு, ரஷியாவுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் ஆயுதப் படைகள் குர்ஸ்க் பகுதியில் கடந்த நாளில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளன, பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 2 கவச வாகனங்கள், 4 கார்கள் மற்றும் 3 மோட்டார்கள் அழிக்கப்பட்டன. மொத்தத்தில், உக்ரைன் குர்ஸ்க் பகுதியில் தாக்குதலின் போது இதுவரை 40,060 க்கும் மேற்பட்ட வீரர்களையும், 236 பீரங்கி டாங்கிகளையும் இழந்துள்ளது” என்று அதில் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நோவோவனோவ்கா கிராமத்தின் கட்டுப்பாட்டை ரஷியப் படைகள் மீண்டும் பெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் கூறி உள்ளது.